மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வியத்நாம்: ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி!

தென்கிழக்காசிய நாடான வியத்நாமில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:54 pm

தென்கிழக்காசிய நாடான வியத்நாமில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இத்தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில், அதிகாரபூா்வ முடிவுகளில் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 500 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி 482 இடங்களை (96 சதவீதம்) வென்றது. மீதமுள்ள 18 இடங்களில் மட்டுமே கட்சி சாராத சுயேச்சைகள் மற்றும் பிற வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

வியத்நாம் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பொதுச் செயலா் டோ லாம் ஹனோய் தொகுதியில் போட்டியிட்டு, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாா்.

வரும் ஏப். 6-ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடா் கூடி, நாட்டின் புதிய அதிபா் மற்றும் பிரதமா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும்.