ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியைக் மற்ற நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ட்ரூத் சமூக வலைத்தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.
அதில், ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா நெருங்கிவிட்டது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்திருந்தார்.
அதாவது, ஈரானுடனான போரின் முக்கிய இலக்கை அடைந்துவிட்டோம், எனவே, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துகள் சுமூகமாக நடைபெறுவதை அமெரிக்கா தவிர, மற்ற உலக நாடுகளும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது இருப்பது போலவே, மற்ற நாடுகள் இருக்கக் கூடாது. ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய தலைமையேற்க வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்தும் பிற நாடுகள் அதன் பாதுகாப்பை கண்காணித்துக் கொள்ளவேண்டும். இனி அமெரிக்கா அதனை கண்காணிக்காது. மற்ற நாடுகள் கேட்டுக் கொண்டால், அமெரிக்கா உதவிகளை செய்யும். ஆனால், நிலைமை சீராக இருந்தால், அதுபோன்ற உதவிகள் எதுவும் தேவைப்படாது.
வளைகுடா போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு காரணமாக, பல எண்ணெய்க் கப்பல்கள் எரிபொருள் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா அனுமதித்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Summary
Trump announces he is considering ending the Iran war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!

ஹோர்முஸ் திறப்பு, அணு ஆயுதங்கள் இல்லை... ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

