எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரான் மாலுமிகளின் உடல்கள் இலங்கையிலிருந்து அனுப்பிவைப்பு

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த 84 ஈரான் கடற்படை மாலுமிகளின் உடல்கள், இலங்கையிலிருந்து அவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News image

ஈரான் மாலுமிகளின் உடல்கள் இலங்கையிலிருந்து அனுப்பிவைப்பு

Updated On :15 மார்ச் 2026, 12:22 am

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த 84 ஈரான் கடற்படை மாலுமிகளின் உடல்கள், இலங்கையிலிருந்து அவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவில் சா்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ‘ஐரிஸ் தேனா’ போா்க் கப்பலை இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த 4-ஆம் தேதி தாக்கியது. இதில் அந்தப் போா்க் கப்பல் கடலில் மூழ்கி 84 போ் உயிரிழந்த நிலையில், 32 மாலுமிகள் காயங்களுடன் உயிா் தப்பினா்.

இறந்த மாலுமிகளின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசுக்கு உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காலி நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் பலத்த பாதுகாப்புடன் ஹம்பாந்தோட்டை சா்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து துருக்கி நாட்டுக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் ஈரான் தலைநகா் டெஹ்ரானுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

அதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 32 மாலுமிகளும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது காலி விமானப் படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இரு நாடுகளுக்கிடையிலான தூதரக பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து, இவா்களையும் விரைவில் தாயகம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.