ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 1 லிட்டர் எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது.
ஓமனுக்கும் ஈரானுக்கும் இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை பகுத்யானது சர்வதேச எரிசக்தி சந்தையின் முக்கிய பகுதியாகத் திகழ்கிறது. அவ்வழித்தடம் மூடப்பட்டுள்ள நிலையில், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து முடங்கி கச்சா எண்ணெய் விநியோகம் உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தடைபட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவாக 120 டாலர் விலையை நெருங்கிவிட்டது. இதே நிலைமை நீடித்தால் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்திச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் 20 மடங்கு தீவிரமாக ஈரான் மீதான தாக்குதல் இருக்கும் என்று எச்சரித்தார்.
டொனால்ட் டிரம்ப்பை எச்சரிக்கும் விதத்தில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவலர்கள் (ஐஆர்ஜிசி) வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க ராணுவம் மற்றும் இஸ்ரேலின் அரசு ஆகியவற்றின் ஈரானுக்கும் அதன் உள்கட்டமைப்புகளுக்கும் எதிராக தாக்குதல் நீடித்தால், ஈரானின் பாதுகாப்புப்படைகள் இப்பிராந்தியத்திலிருந்து அமெரிக்க, இஸ்ரேல் தரப்புக்கும் அந்தத் தரப்புடனன கூட்டாளிகளுக்கும் மறுஅறிவிப்பு வரும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் ஏற்றுமதியைக்கூட அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளது.
Summary
the armed forces of the Islamic Republic will not allow the export of even one litre of oil from the region to the hostile side - Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


