மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லெபனானில் தீவிரமடையும் இஸ்ரேலின் தாக்குதல்! மீண்டும் மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தல்...

News image

லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்... - AP

Updated On :10 மார்ச் 2026, 7:47 am

லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

முன்னதாக, ஹிஸ்புல்லா படைகளுடன் கடந்த 2023 - 24 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது லெபனானில் வசித்த மக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Israeli military has urged residents of southern Lebanon to evacuate immediately.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.