ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஈரான் போர்: டிரம்ப் - புதின் ஒரு மணிநேரம் தொலைபேசியில் ஆலோசனை!

டிரம்ப் - புதின் ஆலோசனை நடத்தியது பற்றி...

News image

விளாதிமீர் புதின் | டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 4:34 am

ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கி வருகின்றது.

ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புளோரிடாவில் திங்கள்கிழமை செய்தியளர்களை சந்தித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையின் போது, ஈரான் போர், உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமாக சூழல் குறித்து இரு தலைவர்களும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்ததாவது:

“ரஷியா - உக்ரைன் இடையிலான நீண்டகால மோதல் குறித்து பேசினோம். புதினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவு தொடர்ந்து பதட்டமானதாகவே இருக்கின்றன.

ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டுவர புதிய உதவி செய்ய விரும்புகிறார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்த புதினிடம் வலியுறுத்தினேன்.” எனத் தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு முதல்முறையாக டிரம்ப்பும் புதினும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran War: Trump - Putin hold hour-long phone consultation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.