மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானின் உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் தேர்வு: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!

ஈரானில் புதிய உச்ச தலைவர் தேர்வு: ரஷியா வாழ்த்து!

News image

கமேனியின் மகன் மோஜ்தபா| கமேனி - ANI | IANS

Updated On :9 மார்ச் 2026, 11:47 am

ஈரானின் உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க - இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28-இல் கொல்லப்பட்ட, ஈரானின் உச்ச தலைவராக இருந்து அந்நாட்டை வழிநடத்திய அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகனாவார் அயதுல்லா மோஜ்தபா கமேனி (56). இந்நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராக ‘அயதுல்லா’ மோஜ்தபா கமேனி தொடருவார் என்றும் இனி அவரே ஈரானை வழிநடத்துவார் என்றும் அவரது ஆணைப்படியே அந்நாட்டு ராணுவம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மோஜ்தபா கமேனிக்கு டெலிகிராம் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈரானுக்கு ரஷியாவின் தொடர் ஆதரவு இருக்கும் என்றும், அந்நாட்டுக்கு நம்பிக்கையுள்ள ஒரு கூட்டாளியாக ரஷியா திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஈரான் தமக்கெதிரான ராணுவ தாக்குதல்களை எதிர்த்துப் போரிடும் இந்தக் காலத்தில், மோஜ்தபா இத்தகைய உயரிய பதவியில் இருப்பதற்கு சந்தேகத்திற்கிடமின்றி மாபெரும் வீரமும் அர்ப்பணிப்பும் தேவை. உங்களுடைய தகப்பனாரின் பணியை நீங்கள் மாண்புடன் தொடர்ந்து, ஈரானிய மக்களை ஒன்றிணைப்பீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்“ என்று புதின் தெரிவித்துள்ளார்.

Summary

Kremlin congratulates Mojtaba Khamenei on becoming Iranian leader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.