ஈரானில் அண்மையில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் பலியான சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த பிப். 28, தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்துக்குப் பின், சனிக்கிழமை (மார்ச் 7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து டிரம்ப் பேசும்போது, “அந்தத் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. இப்படிச் சொல்ல காரணமும் உள்ளது. ஏனெனில், ஈரான் துல்லியமாக இலக்குகளைக் குறிவைத்து தாக்குபவர்கள் அல்ல. ஆகவே, ஈரானே அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது” என்றார்.
இதனிடையே, இந்தத் தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Summary
about allegations that the US bombed an elementary girls’ school in Iran, Trump flatly denied responsibility and blame Iran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

