மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!

ஈரானில் தொடரும் தாக்குதல்கள்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு

News image

ஈரானில் தாக்குதலால் சேதமடைந்த கட்டடம் - AP Photo

Updated On :8 மார்ச் 2026, 5:53 am

ஈரானில் தாக்குதல்கள் தொடரும் அசாதாரண சூழலில், அங்கு நடைபெறும் போர் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்தது. மேலும், ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

சண்டை தொடங்கியது முதல் இதுவரை, பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்திருப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனர் என்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Iran crisis: Over 1,300 killed and 100,000 displaced as humanitarian toll mounts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.