ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் ட்ரோன்கள், எல்லைதாண்டி அஜர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஜர்பைஜானின் எக்ஸ்க்ளேவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, "அஜர்பைஜான் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும், இது சர்வதேச அளவில் பதற்றங்களை அதிகரிக்கவும் செய்கிறது.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அஜர்பைஜான் கூறியுள்ளது.
Summary
Azerbaijan says two people injured by Iranian drones
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தொடரும் தாக்குதல்!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!

‘அமெரிக்காவை பழிவாங்குவோம்’.. முதல் உரையில் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



