தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...

News image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தாக்குதல் (கோப்புப் படம்) - AP Photo

Updated On :3 மார்ச் 2026, 9:28 am

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கெராஷ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிலப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கெனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நிலநடுக்கம் அங்கு மேலும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பழிதீர்க்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

An earthquake has struck Iran's Fars province amid rising war tensions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.