ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்கலில் படுகாயமடைந்த கமேனியின் மனைவி உயிரிழந்தார். இந்தத் தகவலை ஈரானிய ஊடகங்கள் இன்று(மார்ச் 2) வெளியிட்டுள்ளன.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை மதகுரு இல்ல வளாகம் ஆகியவையும் அடங்கும்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை (பிப். 28) அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய துல்லியமான தாக்குதல்களில் கமேனியின் மனைவி மன்சூரே கொஜெஸ்தே (Mansoureh Khojasteh) காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 78. கமேனிக்கும் மன்சூரே கொஜெஸ்தேக்கும் கடந்த 1964-இல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Iranian media says Mansoureh Khojasteh, wife of supreme leader Ayatollah Ali Khamenei, has died
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!
ஈரான் புதிய தலைவருக்கு கோமா? தகவலுக்கு 10 மில்லியன் டாலர்! அமெரிக்கா அறிவிப்பு

கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

