குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாடான குவைத் மீது திங்கள்கிழமை ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் இருந்து தீப்பிழம்புகளும் புகையும் எழும்பின. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட விடியோவில், அபாய எச்சரிக்கை ஒலி முழங்க, தூதரகப் பகுதியிலிருந்து புகை வெளியேறுவது பதிவாகியுள்ளது.
இதனிடையே குவைத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கட்டடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தூதரகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
Summary
Fire and smoke rose from inside the US Embassy compound in Kuwait after an Iranian attack on the small Mideast nation on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



