வெனிசுவேலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையும், நாய்க்குட்டி ஒன்றும் மீட்கப்பட்ட தருணங்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் வடக்கு மாகாணமான லா குவாரியா உள்ளிட்ட இடங்களில் மீட்புப் படையினரும், அவசர உதவிப் பிரிவினரும் விரைந்துள்ளனர். அங்கு இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடுதல் பணி தொடர்கிறது.

Javier Campos
கடுமையான சூழலில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வந்த நிலையில், இடிபாடுகளுக்குள் ஒரு குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட தருணத்தை மீட்புப் படை வீரர்கள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். குழந்தைக்கு உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படாதது அவர்களுக்கு நிம்மதியை கொடுத்தது.
இது, இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கலாம், அவர்களைத் தேடி உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
அதுபோல, பொலிவரியன் பகுதியில் ஒரு குழந்தையும், மற்றொரு இடிபாடுகளுக்குள் இருந்து 12 வயத சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு பகுதியிலிருந்து பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்புப் பணியின்போது, இடிபாடுகளுக்குள் இருந்த நாய் ஒன்றையும் அவர்கள் கண்டனர். முதலில் அதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, பிறகு இடிபாடுகளை அகற்றி அதனை மீட்டனர்.
மற்றொரு விடியோவில், நிலநடுக்கத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மணி, வேறொரு கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்ட தன்னுடைய மகனைப் பார்த்து கண்ணீர் விட்ட விடியோக்களும் வெளியாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெனிசுவேலா நிலநடுக்கங்கள்: 188 பேர் உயிரிழப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்; பல்வேறு நாடுகள் உதவிக்கரம்!

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை கம்யூனிஸ்ட், விசிக கட்சியினா் விரைவில் உணா்வா்! - டிடிவி. தினகரன்







