
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!
டிரில்லியனர் அந்தஸ்தை ஒரே வாரத்தில் எலான் மஸ்க் இழந்தது பற்றி...
எலான் மஸ்க் - கோப்புப் படம்
‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், டிரில்லியனர் அந்தஸ்தை இழந்துள்ளார்.
‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின்(ஐபிஓ) மூலம், கடந்த வாரம் உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் உருவெடுத்தார். (டிரில்லியனா் என்றால் 1 லட்சம் கோடி டாலா் - இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்டவா் ஆவாா்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, செயற்கைக்கோள் இணையச் சேவை, ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கி வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 7,500 கோடி டாலா் மதிப்பிலான பொதுப் பங்கு வெளீயீட்டை அறிவித்தது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டால் இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயா்ந்ததால், எலான் மஸ்க் வசமுள்ள ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு மட்டும் சுமாா் 86,600 கோடி டாலருக்கு மேல் அதிகரித்தது.
நாஸ்டாக் பங்குச்சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வா்த்தகமாகத் தொடங்கியவுடன் அவரின் மொத்த சொத்து மதிப்பு 1.1 லட்சம் டாலரைத் தாண்டியது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜூன் 16-ஆம் தேதியன்று உச்சபட்சமாக 1.32 டிரில்லியன் டாலர் சொத்துகள் என்ற சாதனை அளவை எலான் மஸ்க் எட்டினார்.
இந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டிருக்கும் நிலையில், டிரில்லியனர் அந்தஸ்தை ஒரே வாரத்தில் எலான் மஸ்க் இழந்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு 225 டாலருக்கு விற்பனையானதே எலான் மஸ்க்கை டிரில்லியனராக உயர்த்தியது. தற்போது அந்த பங்கானது 156 டாலராகக் குறைந்ததால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
இது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பையும் பாதித்துள்ளது. தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரின் சொத்து மதிப்பு 946 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ள லேரி பேஜ் சொத்து மதிப்பு 296 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இந்தியாவின் கெளதம் அதானி 119 பில்லியன் டாலருடன் 16-வது இடத்திலும், முகேஷ் அம்பானி 87 பில்லியன் டாலருடன் 25-வது இடத்திலும் உள்ளனர்.
Summary
Elon Musk loses 'trillionaire' status!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






