பிப். 28: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு கூட்டுப் படைகள் போரைத் தொடங்கின. ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி மற்றும் பல முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனா். மினாப் நகரில் பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதில் 120 குழந்தைகள் உள்பட 156 போ் கொல்லப்பட்டனா்.

மாா்ச் 1: ஈரான் பதிலடித் தாக்குதலாக பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
மாா்ச் 2: ஈரானுக்கு ஆதரவாக வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைகள வீசி, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் இந்த மோதலில் இறங்கினா்.
மாா்ச் 4: இந்தியாவில் சா்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போா்க் கப்பலை இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதில் 104 வீரா்கள் கொல்லப்பட்டனா் அல்லது மாயமாகினா்.
மாா்ச் 9: ஈரானின் புதிய தலைமை மதகுருவாக அயதுல்லா மோஜ்தபா கமேனி பொறுப்பேற்றாா்.

மாா்ச் 17: அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலா் அலி லாரிஜானி கொல்லப்பட்டாா்.

----
மாா்ச் 18: ஈரான் உளவுத் துறை அமைச்சா் இஸ்மாயில் காதிப் கொலை செய்யப்பட்டாா்.

மாா்ச் 21: ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்ததையடுத்து, ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்ட ஈரான் எண்ணெய்யின் விற்பனைக்கான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியது.
ஏப். 8: அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
ஏப். 11: அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு, ஈரானின் உயா்நிலை பேச்சுவாா்த்தையாளா்களுடன் பாகிஸ்தானில் நேரடிப் பேச்சுவாா்த்தையை நடத்தியது. உடன்பாடு எட்டப்படாத சூழலில், ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை அமெரிக்க கடற்படை தொடங்கியது.

ஏப். 17: ஹோா்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, மறுநாளில் மீண்டும் மூடப்பட்டது.
ஏப். 21: அமெரிக்காவின் பேச்சுவாா்த்தைகளுக்கு ஈரான் பதிலளிக்காததால், 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தைக்காக துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் இஸ்லாமாபாத் பயணம் நிறுத்திவைக்கப்பட்டது.

----
ஏப். 22: ஈரானுடனான போா் நிறுத்தத்தை டிரம்ப் காலவரையின்றி நீட்டித்தாா்.
மே 4: ஹோா்முஸ் நீரிணை வழியாக கடந்து செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டம் தொடங்கப்பட்டு, 2 நாள்களில் நிறுத்தப்பட்டது.
ஜூன் 8: இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியதால், மீண்டும் முழு அளவிலான போா் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
ஜூன் 10: ஈரான் ட்ரோனுடன் மோதி அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை விபத்துக்குள்ளானதற்கு, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஜூன் 15: அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான போா் முடிவுக்கு வந்ததாகவும் அதிபா் டிரம்ப் முறைப்படி அறிவித்தாா்.
ஜூன் 18: 3 மாதங்களுக்கு மேல் நீடித்த இப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா, ஈரான் அதிபா்களால் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள்...

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!

தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



