அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

வாங் யி

Updated On :19 ஜூன் 2026, 1:53 am IST

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

இதன் ஒரு பகுதியாக தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்கிறாா். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தெற்குலகின் குரலாக முன்னின்று உலக அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சமத்துவ நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படும் வலுவான அமைப்பாக பிரிக்ஸ் திகழ்கிறது என்றாா்.

இந்தியா-சீனா எல்லை விவகார சீன சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ள வாங் யி, இந்திய பயணத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.