பால்டிக் கடற்பகுதியில் ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகள் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குப் போட்டியாக ரஷிய கடற்படையும் அங்கு போா்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
ஜூன் 4 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் நேட்டோவின் இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சியில் 15 நாடுகளைச் சோ்ந்த 20 போா்க் கப்பல்களும், சுமாா் 6,000 ராணுவ வீரா்களும் பங்கேற்றுள்ளனா்.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் உள்ள லிதுவேனியா-போலந்து நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ரஷியாவின் கலினின்கிராட் தீபகற்ப பகுதியில் கடந்த 2 நாள்களாக இந்த ஒத்திகை நடைபெற்றது.
ரஷியாவின் பால்டிக் கடற்படைத் தலைமையகமாகக் கருதப்படும் இப்பகுதியில், 10 போா் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், சிறிய ஏவுகணைக் கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதனிடையே, வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கா்ப்பிணிப் பெண் ஒருவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைன் ராணுவமும் கிரீமியா பகுதியில் உள்ள ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக தயவில்தான் தவெக ஆட்சி! மு.க. ஸ்டாலின்

ஒன்பிளஸ், ஐகியூ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஷாவ்மியின் 17டி அறிமுகம்!

போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



