வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா

உக்ரைனுக்கு இனி ஒரு ஆயுதம்கூட அனுப்பப்படாது: பல்கேரியா திட்டவட்டம்!

News image

ரஷியாவுக்கு எதிரான சண்டையில் பலியான உக்ரேனிய வீரரின் உடல் சுமந்து செல்லப்படும் காட்சி - AP

Updated On :9 ஜூன் 2026, 8:08 pm IST

உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக பல்கேரியாவில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமிதார் ஸ்டோயானோவ் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது : “உக்ரைனில் நீடிக்கும் போரைப் போர்க்களத்தில் தீர்க்க முடியாதென்பதை நாங்கள் ஏற்கெனவே தெளிவாகத் உரைத்துவிட்டோம். நாம் கண்முனே கண்டுகொண்டிருப்பது ஆக்கிரமிப்புக்கானதொரு போர்; எவ்வளவு ஆயுதம் குவிக்கப்பட்டாலும் அதன் முடிவில் மனித உயிர்களின் இழப்பே நேரிடும்.

ஆகவே, உக்ரைனுக்கு அதிக மக்களே தேவை; அதைவிடுத்து அதிக ஆயுதங்கள் தேவையில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு போதுமான அளவு ஆயுதங்கள் உள்ளன. ஆகவே, நாங்கள் உக்ரேனிய ராணுவத்துக்கு அதிக ஆயுதங்கள் வழங்குவதை ஊக்குவிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான பல்கேரியா, உக்ரைன் மீது கடந்த 2022-இல் ரஷியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், பல்கேரியாவில் பிரதமர் ரூமென் ராதேவ் தலைமையிலான புதிய அரசு கடந்த ஏப்ரலில் ஆட்சியமைத்தது. உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள புதிய பல்கேரிய அரசின் முடிவு, ரஷியாவின் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு எதிர்வினையாற்றி வரும் உக்ரைனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Summary

Bulgaria's new government to stop supplying weapons to Ukraine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.