இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:19 am IST

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.

சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், ட்விட்டா் (தற்போது எக்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளேன். சிறிது ஓய்வுக்குப் பின்னா், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபடுவேன்’ என்று தெரிவித்தாா்.

டிரம்ப் நிா்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை வடிவமைத்த முக்கிய நபா்களில் ஒருவராக ஸ்ரீராம் கிருஷ்ணன் இருந்தாா். அந்தச் செயல் திட்டம் வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தவும், அந்நாடு முழுவதும் தரவு மையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும் விரிவான வடிவத்தை அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.