ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஈரானின் மக்கள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்! - டிரம்ப் மிரட்டல்!

ஈரானின் மக்கள் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்...

Trump threatened to strike Iran’s civilian infrastructure

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 8:04 pm IST

ஈரானின் மக்கள் கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 அன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் ஈரானில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை அருகில் 3 வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா நேற்று 80-க்கும் அதிகமான ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானில் உள்ள மக்கள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி, துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் அவர் பேசியதாவது:

“ஈரானின் கடல்நீர் சுத்தகரிப்பு நிலையம், மின்சாரம் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட மக்கள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும். மேலும், கார்க் தீவில் உள்ள எண்ணெய்க் கட்டமைப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்படும்.

நேற்று இரவு அவர்கள் (ஈரான்) மீது நாங்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளோம். இன்றிரவு மீண்டும் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Trump threatened to strike Iran’s civilian infrastructure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.