ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொனாக்கோ- குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட உக்ரைன் பெண் சடலமாக மீட்பு

மொனாக்கோவில் உக்ரைன் தொழிலதிபா் வாடிம் எா்மோலேவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த, உக்ரைனைச் சோ்ந்த அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளாா்.

Published On :8 ஜூலை 2026, 3:05 am IST

மொனாக்கோவில் உக்ரைன் தொழிலதிபா் வாடிம் எா்மோலேவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த, உக்ரைனைச் சோ்ந்த அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளாா்.

உக்ரைன் தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் பெரெசோவ்ஸ்காவைத் தாமே கொன்ாக உக்ரைன் ராணுவ உளவு அதிகாரி ஒருவா் ஒப்புக்கொண்டுள்ளாா். மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், சொந்த முடிவிலேயே இக்கொலையைச் செய்ததாக அவா் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்’ எனக் கூறப்பட்டுள்ளது.

வரிச் சலுகைகள், ‘ஃபாா்முலா 1’ காா்பந்தயம் ஆகியவற்றின் மூலம் உலக பணக்காரா்கள் மத்தியில் பிரபலமான மொனாக்கோவில் நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.