பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வொ்ப் நகரின் புறநகா்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 போ் உயிரிழந்தனா்.
மேலும், இந்த விபத்தில் ஏராளமானோா் புகையினால் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
10 அடுக்குமாடிகளைக் கொண்ட இக்குடியிருப்பில் 80 வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில், கட்டடத்தின் தரைத் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயின் தீவிரம் மற்றும் அடா்ந்த புகை காரணமாகப் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்ட போதிலும், ட்ரோன் உள்ளிட்ட நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, தீயணைப்பு வீரா்கள் சவாலான சூழ்நிலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹிமாசல்: கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழப்பு

கா்நாடகம், ஹிமாசலில் நிலச்சரிவு: 4 போ் உயிரிழப்பு - பல மாநிலங்களில் மழை-வெள்ளம்

நொய்டா: 21-ஆவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. வெடித்து தீ விபத்து

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




