இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூரும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தியது.
ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதேவும், புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஈரானிய ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியாக நசீர்சாதே பதவி வகித்து வந்தார்.
கடந்தாண்டு இஸ்ரேல் தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதை தொடர்ந்து, முகமது பாக்பூர் தளபதியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran's Defense Minister killed in Israeli strike!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



