பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷியாவுக்குச் செல்வதாக, பாகிஸ்தான் செனட்டின் பாதுகாப்புக் குழு தலைவர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில், மாஸ்கோ செல்லும் பிரதமர் ஷரீஃப் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷிய அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ளதால், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென ரஷிய அரசு வெள்ளிக்கிழமை (பிப். 27) வலியுறுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரதமர் ஷரீஃப் மாஸ்கோ செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 6 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022 பிப். 24 அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு முறைப் பயணமாக ரஷியா சென்றிருந்தார். அன்றுதான் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Pakistani Prime Minister Shahbaz Sharif is reportedly on a state visit to Russia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!

போர்க் கூட்டணி? சௌதி அரேபியா செல்கிறார் பாக். பிரதமர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



