பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி: பாகிஸ்தான் அரசு கடும் எச்சரிக்கை
நன்கொடை அல்லது நிதியுதவி வழங்குவோா் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.


பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 90 பயங்கரவாத அமைப்புகளுக்கு நன்கொடை அல்லது நிதியுதவி வழங்குவோா் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் நன்கொடைகள் தகுதியான ஏழை, எளியவா்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப் அறக்கட்டளை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்க வேண்டும்.
மாறாக, பாகிஸ்தானின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகத் தடை செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கக் கூடாது. மீறுவோா், பயங்கரவாதத்துக்குத் துணை புரிந்ததாகக் கைது செய்யப்படுவா் என மாகாண உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...