ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க படைகளுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிக்கின்றன.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கள்கிழமை முதல் பிரம்மாண்ட போா்ப் பயிற்சியைத் தொடங்கியது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி 13 போர்க் கப்பல்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போா்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டவையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.
இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “ஜெனீவாவில் ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பல விஷயங்களில் உடன்பாடு எட்டவில்லை. அதுகுறித்து இரு வாரங்களுக்குள் மீண்டும் ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண டிரம்ப் முன்னுரிமை அளிக்கிறார். ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
summary
US air forces massing in the Middle East! Attack on Iran this week?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக விமானங்களை குவித்த அமெரிக்கா! ஈரானுக்கு மிரட்டல்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகள் தயாா்நிலை! மத்திய கிழக்கு விரையும் 2-வது போா்க்கப்பல்!

ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!!

ஈரான் அரசுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

