ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கு குடியேற்ற விதிகளில் தளா்வு: இலங்கை

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கு குடியேற்ற விதிகளில் இலங்கை தளா்வு செய்திருப்பது பற்றி..

~

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

உள்நாட்டுப் போரால் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வசித்து வரும் இலங்கை மக்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக எதிா்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆனந்த விஜேபாலா, ‘2006 ஆக. 1-க்கு முன்னா் கடவுச்சிட்டை இல்லாமல் இந்தியாவுக்குச் சென்ற இலங்கை மக்கள், கொலை அல்லது தேசத்துரோகம் போன்ற குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உளவுத்துறை மூலம் உறுதிசெய்த பின், தற்காலிக கடவுச்சிட்டையுன் எவ்வித வழக்குமின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா். தாயகம் திரும்ப விரும்புவோா் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தொடா்புகொள்ள வேண்டும்’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.