ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாகிஸ்தான், சவூதி, துருக்கி இடையேயான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் துணிச்சலான நடவடிக்கை: ட்ரம்ப் பாராட்டு

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ட்ரம்ப் பாராட்டியிருப்பது குறித்து...

US President Donald Trump has termed the Saudi Arabia-Turkey-Pakistan defence agreement ...

அமெரிக்க அதிபா் ட்ரம்ப் - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:34 pm IST

வாஷிங்டன்: பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, "மிகவும் அர்த்தமுள்ள வகையில்" தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான "பெரிய, துணிச்சலான மற்றும் முக்கியமான முதல் படி" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள அல் ஸஃபா அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் ஆகியோர் இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலும் மற்ற நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.

'எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிரான கூட்டுத் தடுப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் இது வழிவகுக்கும்' எனவும் மூன்று நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இதனை மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைவதற்கான ஒரு "பெரிய, துணிச்சலான மற்றும் முக்கியமான முதல் படி" என்று 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வர்ணித்துள்ளார்.

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் சமீபத்தில், இறுதியாக மெக்கா முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இது மத்திய கிழக்கு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதையும், நாடுகள் எவ்வாறு இறுதியாக மிகவும் அர்த்தமுள்ள வகையில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும் காட்டுகிறது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கண்ட மூன்று நாடுகளின் சிறந்த தலைமைத்துவத்திற்கு வாழ்த்துகள்.

இது ஒரு பெரிய, துணிச்சலான மற்றும் முக்கியமான முதல் படி - ஆச்சரியம்! என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

மூன்று நாடுகளும் 'மெக்கா முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்ட சில நாள்களுக்குப் பிறகு ட்ரம்பின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

மூன்று நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள மெக்கா முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் முழுமையாக உறுதியுடன் உள்ளது மற்றும் இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Summary

US President Donald Trump has termed the Saudi Arabia-Turkey-Pakistan defence agreement a...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.