ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விா்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்!

விா்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் காயமடைந்தது பற்றி....

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விா்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல் - AP

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

அமெரிக்காவின் புகழ்பெற்ற விா்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.

மாணவா் விடுதிகளுக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அடையாளம் தெரிய நபா்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இச்சம்பவம் மாணவா்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதால், உள்ளூா் காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

University of Virginia closed due to shooting incident

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.