ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆப்கனில் 5 ஆண்டு தலிபான் ஆட்சி! தொடரும் நெருக்கடி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி...

தலிபான்கள் கொண்டாட்டம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடினா்.

தலைநகா் காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே, தலிபான்களின் கவச வாகனங்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் அணிவகுத்துச் சென்றன.

‘இந்த 5 ஆண்டு கால வெற்றிக்கு மன உறுதி, தைரியம் மற்றும் இறைவனின் உதவியே காரணம்’ என்று ஆப்கன் உள்துறை அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி விடியோ உரை வாயிலாக தெரிவித்தாா்.

நாட்டில் தங்களின் ஆட்சி நிலையாகவும், கட்டுப்பாட்டுடனும் உள்ளதாக தலிபான்கள் காட்டிக்கொள்ள முற்பட்டாலும், அங்கு மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், சா்வதேச அளவில் தலிபான் அரசு இன்னும் முழுமையான அங்கீகாரத்தைப் பெறவில்லை (ரஷியா மட்டுமே முறைப்படி அங்கீகரித்துள்ளது). முன்பு, தலிபான்களின் முக்கிய நட்பு நாடாக இருந்த பாகிஸ்தானுடனான உறவும் தற்போது மோசமடைடைந்துள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு உதவிகள் சுருங்கியுள்ள நிலையில், ஆப்கனில் கடந்த 2021-க்குப் பிறகு மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரித்துள்ளது. கடும் வறட்சி, நிலநடுக்கங்கள் மற்றும் அண்டை நாடுகளான ஈரான், பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் மக்கள் திருப்பி அனுப்பப்படுவது போன்றவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

Summary

Five Years of Taliban Rule in Afghanistan - The Crisis Continues

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.