ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிரமிடு சுரங்கத்துக்குள் நுழைந்த ரோபோ! 4500 ஆண்டுகள் யாரும் தீண்டாத சீல் வைத்த கதவுகள்!!

பிரமிடுக்குள் இருந்த சுரங்கப் பாதையில் நுழைந்த ரோபோ 4500 ஆண்டுகள் யாரும் தொடாத சீல் வைத்த கதவுகள் கண்டறியப்பட்டன.

pyramid

பிரமிடு - பிரதி படம் - ஏஎன்ஐ

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:35 pm IST

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகளில் ஒன்றான கிஸா பிரமிடின் சுரங்க வழிக்குள் ரோபோ ஒன்று அனுப்பப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அங்கு சீல் வைக்கப்பட்ட கதவு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சுரங்கப் பாதை வழியாகச் சென்றால் சுமார் 4500 ஆண்டுகளாக இதுவரை யாரும் தொடாத ஒரு சீல் வைக்கப்பட்ட கதவுகள் ரோபோவை தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இதன் மூலம், அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. பிரமிடுக்குள் இருந்த மிக ஆழமான, இருளான சுரங்கப் பாதை வழியாக ஒரு ரோபோவை அனுப்பி, அந்த சுரங்கப் பாதைக்குள் என்ன இருக்கிறது என்று கண்டறிய நவீன தொழில்நுட்ப மற்றும் ஸ்கேன் செய்யும் வசதிகளுடன் கூடிய ரோபோவை அனுப்பினர் விஞ்ஞானிகள். இந்தப் பாதைக்குள் மனிதர்கள் நுழைந்து ஆய்வு செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று இதுவரை ஆய்வு நடத்தப்படாத ஒரு இடத்துக்குள் ரோபோ அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பாதைக்குள் சென்ற ரோபோ, அங்கு ஒரு சுவர் அல்லது சீல் வைக்கப்பட்ட கதவு போன்ற அமைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் மூலம், பிரமிடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்புகள் குறித்து கண்டறியப்படும் என்று கூறுகிறார்கள்.

எகிப்து நாட்டில் அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெரும் என்ற நம்பிக்கையோடு, மம்மிகளாக மாற்றப்பட்டு பாதுகாத்து வைக்க பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு பிரமிடுகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக இந்த கிஸா பிரமிடு, பல ஆண்டுகளாக ஆய்வுக்குள்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை, அந்த பிரமிடுவின் உள்கட்டமைப்புப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

தற்போதைய ஆய்வும், பிரமிடுகளின் உள்கட்டமைப்புகளுக்குள், ஆய்வாளர்கள் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது என்பதையே உணர்த்துவதாக உள்ளதாம். கிட்டத்தட்ட 100 அடி நீளமுள்ள பாதைக்குள் ரோபோ சென்று பார்த்தபோது, பல ஆயிரம் ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருக்கும் கதவு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, அந்த சுரங்கப் பாதைக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது சீல்வைக்கப்ப்டடிருக்கும் கதவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை திறக்கப்படாத இந்த கதவுகளுக்குப் பின் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

ஒருவேளை இந்தக் கதவுகள் திறக்கப்பட்டால், பிரமிடுகளின் உள்கட்டமைப்பைப் பற்றி உலகமே அறிந்துகொள்ள வழி கிடைக்கலாம். ஆனால், இந்த பிரமிடுகளின் கட்டமைப்பில் எந்த சேதமும் ஏற்படுத்தாமல், ஆய்வு நடத்தவே, ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள். இப்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னால் இருப்பதைக் கண்டறிய எந்த விதமான தொழில்நுட்பம் உதவும் என்பதைத்தான் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்களாம்.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை ஒட்டிய புறநகர் பகுதியில் அமைந்துள்ளது கிஸா. இங்குள்ள நைல் நதி கரையோரம் சுமார் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய 'கிஸா பிரமிடு' பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

146 மீட்டர் உயரத்திலான இந்தப் பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டதாக கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு கற்களும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டவை.

Summary

Robot enters pyramids shaft Sealed doors untouched for 4,500 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.