ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமைதிப்பேச்சு! ஈரானிய தலைவர்களுடன் பாக். அமைச்சர் சந்திப்பு!

அமெரிக்கா உடனான போரை முடிக்குக் கொண்டு வருவது குறித்து ஈரானிய தலைவர்களுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பேச்சு...

Pakistan Minister Naqvi meets top Iranian leaders

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உடன் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி... - எக்ஸ்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:00 pm IST

அமெரிக்கா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனை சந்தித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் உடனான போரில், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செவ்வாய்க்கிழமை (ஆக. 11) காலை தெஹ்ரான் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனை சந்தித்த பாகிஸ்தானிய அமைச்சர் நக்வி புதிய அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். இதையடுத்து, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியையும் சந்தித்து நக்வி உரையாடியுள்ளார்.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு வலிமையானது எனவும், பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இருதரப்பும் இணைந்து செயல்படும் எனவும் அதிபர் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். இந்தப் பயணத்தில், அதிபர் பெஷேஷ்கியனை பாகிஸ்தான் அமைச்சர் நக்வி மீண்டும் சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானுக்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஈரான் உடன் ஓமன் அரசு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan Minister Naqvi has held talks with Iranian President Pezeshkian regarding bringing an end to the conflict with the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.