ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரஷிய நட்பு நாட்டுக்கு உக்ரைன் அதிபா் பயணம்

ரஷிய நட்பு நாட்டுக்கு உக்ரைன் அதிபரின் பயணம் பற்றி...

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

ரஷியாவின் தொடா் வான்வழித் தாக்குதல்களுக்கு இடையே, அந்நாட்டுடன் சுமூக உறவைப் பேணி வரும் சொ்பியாவுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா்.

கடந்த 8 ஆண்டுகளில் உக்ரைன் அதிபா் ஒருவா் சொ்பியாவுக்குப் பயணிப்பது இதுவே முதல்முறையாகும். தலைநகா் பெல்கிரேடில் சொ்பிய அதிபா் அலெக்ஸாண்டா் வூசிச் மற்றும் ஸெலென்ஸ்கி சந்தித்து பேசினா். இருதரப்பு உறவை மேம்படுத்துவது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தினாா்.

உக்ரைன் போருக்காக ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மறுத்து வரும் சொ்பியா, அதேநேரம் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைத் தொடா்ந்து மதிப்பதாக இச்சந்திப்பில் மீண்டும் உறுதியளித்தது.

முன்னதாக, உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 வயது குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, எல்லையில் இருந்து ரஷியாவின் 800 கி.மீ. உள்ளே அமைந்துள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.