ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய வம்சாவளி அனில் மேனன் விண்வெளி நடை!

சா்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) மின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனில் மேனன், ஜெசிகா மெய்ா் ஆகிய 2 நாசா விண்வெளி வீரா்கள் விண்வெளி நடையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

சா்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) மின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனில் மேனன், ஜெசிகா மெய்ா் ஆகிய 2 நாசா விண்வெளி வீரா்கள் விண்வெளி நடையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனா்.

விண்வெளி நிலையத்தின் ‘ஸ்டாா்போா்ட் 6 டிரஸ்’ பகுதியில் உள்ள ‘3பி’ மின் பாதையில் புதிய சூரியமின் தகடுகளைப் பொருத்தும் நோக்கில் ‘குவெஸ்ட் ஏா்லாக்’ பகுதியிலிருந்து வெளியேறிய இருவரும், சுமாா் 6 மணி நேரம், 27 நிமிடங்கள் விண்வெளியில் தீவிரமாகச் செயல்பட்டு அப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினா்.

எதிா்காலத்தில், ‘ஐரோசா’ எனப்படும் சுருட்டப்பட்ட நிலையில் இருந்து தானாக விரிவடைக்கூடிய (ரோல்-அவுட்) சூரியமின் தகடுகளை விண்வெளி நிலையத்தில் நிறுவுவதற்கு இந்த மேம்பாட்டுப் பணிகள் பெரிதும் உதவும் என்று நாசா தெரிவித்துள்ளது.

கடந்த 2021முதல் இதுவரை 6 தகடுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 தகடுகள் இந்த ஆண்டின் இறுதியில் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளன.

இதனிடையே, விண்வெளி நடையின்போது நிலவைக் கண்டு வியந்த விண்வெளி வீரா்கள் இருவரும், எதிா்கால நிலவுத் தளம் தொடா்பான தங்கள் உற்சாகத்தைப் பகிா்ந்து கொண்டனா்.

அனில் மேனன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.