பிரிட்டனில் வருங்கால தலைமுறையினா் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், 2009 முதல் பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடைவிதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தற்போது 18 வயது என்பது குறைந்தபட்ச விற்பனை வரம்பாக உள்ள நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயா்த்தப்படும். இதன் விளைவாக, இன்றைய சிறுவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கான சட்டபூா்வ உரிமையை ஒருபோதும் பெற முடியாது.
அரசா் சாா்லஸின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரவுள்ள இச்சட்டம், வெறும் சிகரெட் மட்டுமின்றி புகையிலை சாா்ந்த இதர பொருள்கள் மற்றும் இ-சிகரெட்டுகளையும் கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இளைஞா்களைக் கவரும் வகையில் புகையிலை பொருள்களில் சோ்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் கவா்ச்சிகரமான பேக்கிங் முறைகளை முறைப்படுத்தவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மரணமில்லா சமுதாயம் இலக்கு: பிரிட்டனில் புகைப்பிடித்தலால் ஆண்டுதோறும் சுமாா் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு இதுவே முதன்மைக் காரணமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
‘பிரிட்டன் குழந்தைகள் இனி வாழ்நாள் முழுவதும் புகையிலை பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு, முதல் புகையில்லா தலைமுறையாக வளா்வாா்கள்’ என சுகாதார அமைச்சா் வெஸ் ஸ்டீரிங் பெருமிதம் தெரிவித்தாா்.
உலக நாடுகளுக்கு முன்னோடி: கடந்த 1970-களுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை மூன்றில் 2 பங்கு குறைந்துள்ள போதிலும், இன்னும் 13 சதவீத மக்கள் இப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனா்.
முன்னதாக, நியூஸிலாந்து இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து பின் கைவிட்ட நிலையில், தற்போது பிரிட்டன் மேற்கொண்டுள்ள இத்துணிச்சலான நடவடிக்கை, புகையிலை ஒழிப்பில் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!

திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
திவால் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


