ஈரானில் கடந்த 44 நாள்களாக இணைய வசதி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை பற்றி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரானில் இணைய முடக்கம் இன்றுடன் 44 நாள்களை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட இணைய முடக்கங்களில் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் இவ்வளவு நாள்கள் இணையம் முடக்கப்படுவது இதுவே முதல்முறை என இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தரவுகளை வழங்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் தொடர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரான் அரசு அங்குள்ள இணைய வசதியை முடக்கியது. ஈரான் அரசு போரைக் காரணம் காட்டி அன்றுமுதல் பொதுமக்களுக்கான இணைய அணுகலுக்கு முழுமையான தடை விதித்தது.
தற்போது அமலில் இருக்கும் இணைய முடக்கம் இவ்வாண்டு தொடக்கத்தில் செய்யப்பட்ட டிஜிட்டல் அடக்குமுறையின் அதே பாணியை பின்பற்றும் விதமாக அமைந்துள்ளது.
ஜனவரி மாதம் ஈரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஒரு வார காலம் அங்கு இணைய வசதி முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Iran's 44-day internet blackout breaks global records
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

சீன உளவு செயற்கைக்கோளை ரகசியமாகப் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



