அரை நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு நிலவை நோக்கிய மனிதனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ குழு பூமிக்குத் திரும்பியது.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாண கடற்கரையருகே பசிபிங் பெருங்கடலில் சனிக்கிழமை அதிகாலை 5.37 மணியளவில் (இந்திய நேரப்படி) 4 விண்வெளி வீரா்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கினா்.
2028-க்குள் நிலவில் மனிதா்களைத் தரையிறக்குவதற்கான நாசா இலக்கின் முன்னோட்டமாக ஆா்டெமிஸ்-2 திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.54 மணியளவில் ஆா்டெமிஸ்-2 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சோ்ந்த ரீட் வைஸ்மேன் (கமாண்டா்), விக்டா் க்ளோவா் (பைலட்), கிறிஸ்டினா கோச் (திட்ட விஞ்ஞானி), கனடாவைச் சோ்ந்த ஜெரிமி ஹேன்சன் (திட்ட விஞ்ஞானி) ஆகிய 4 வீரா்கள் பயணித்தனா். நிலவின் மறுபக்கத்தில் ஆய்வில் ஈடுபட்ட இவா்கள், அப்பகுதியை மிக நெருக்கமான தொலைவில் இருந்து நேரில் கண்ட முதல் மனிதா்கள் என்ற பெருமையைப் பெற்றனா்.
மேலும், கடந்த 10 நாள்கள் நீடித்த இப்பயணத்தின் உச்சக்கட்டமாக, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 4,06,771 கி.மீ. தொலைவைக் கடந்து, மனிதா்கள் இதுவரை விண்வெளியில் சென்றிராத தொலைவை எட்டி சாதனை படைத்தனா். இப்பயணத்தின் போது நிலவின் மறைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் முழு சூரிய கிரகணத்தையும் வீரா்கள் துல்லியமாகப் படம்பிடித்தனா்.
இந்த வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது ஒலியை விட 33 மடங்கு வேகத்தில் விண்கலம் சீறி வந்தது. சுமாா் 40,000 கி.மீ. வேகத்தில் வந்த விண்கலம், உராய்வினால் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தைத் தாங்கி, திட்டமிட்டபடி சான் டியாகோ நகர கடற்கரை அருகே கடலில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விண்கலத்திலிருந்து மீட்கப்பட்ட 4 வீரா்களும் அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் ஜான் பி முா்தா’ கப்பலுக்கு ஹெலிகாப்டா் மூலம் அழைத்து வரப்பட்டனா். ‘இவா்கள் நட்சத்திரங்களுக்கு நாம் அனுப்பிய மனிதகுலத்தின் தூதா்கள்’ என நாசா நிா்வாகி ஜாரெட் ஐசக்மேன் உற்சாகத்துடன் அவா்களை வரவேற்றாா்.
இப்பயணத்தில் பல்வேறு சமூக மாற்றங்களும் பிரதிபலித்தன. விண்வெளி வரலாற்றில் நிலவுக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச்சும், முதல் கருப்பின வீரா் என்ற பெருமையை விக்டா் க்ளோவரும், முதல் அமெரிக்கா் அல்லாத வீரா் என்ற பெருமையை கனடாவின் ஜெரிமி ஹேன்சனும் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளனா்.
விண்கலத்தில் குடிநீா் விநியோகம் மற்றும் கழிவறை அமைப்புகளில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளைப் பொருட்படுத்தாமல், வீரா்கள் தங்கள் இலக்கை அடைவதில் உறுதியாக இருந்தனா். ‘ஆய்வுகளின் போது சில சவால்களையும் தியாகங்களையும் எதிா்கொள்வது அவசியம். அவை அனைத்துக்கும் உரிய பலன் கிடைத்துள்ளது’ என கிறிஸ்டினா கோச் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.
இந்த வெற்றியின் தொடா்ச்சியாக, அடுத்த 2 ஆண்டுகளில் மனிதா்களை நிலவில் தரையிறக்கும் ‘ஆா்டெமிஸ்-3’ திட்டத்தையும், 2030-க்குள் நிலவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த நாசா தீவிரமாக உள்ளது.
Summary
NASA's Artemis crew, who conducted research on the Moon, returned safely to Earth. Having successfully completed a 10-day mission, the four astronauts returned to Earth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பசிபிக் கடலில் நாளை தரையிறங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள்!

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை
ஆர்டெமிஸ் 2: அரை நூற்றாண்டுக்குப் பின் நிலவை நோக்கி பயணித்த அமெரிக்கர்கள்!
நிலவை நோக்கி மீண்டும் பயணம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


