தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒட்டுமொத்த சமுதாயமும் இன்றிரவு அழியப்போகிறது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

இன்றிரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது என ஈரானுக்கு டிரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை குறித்து...

News image

டொனால்ட் டிரம்ப் - பிடிஐ

Updated On :7 ஏப்ரல் 2026, 2:07 pm

இன்றிரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் இன்று (ஏப். 7) பதிவிட்டுள்ளதாவது:

''இன்றிரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. அது நிகழ நான் விரும்பவில்லை என்றாலும், அநேகமாக அதுவே நடக்கும்.

இருப்பினும், இப்போது ஒரு முழுமையான ஆட்சி மாற்றத்தை அடைந்திருப்பதால், அங்கு மாறுபட்ட, அதிக அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் தீவிரவாதச் சாய்வற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன.

ஒருவேளை, புரட்சிகரமான வகையில் அற்புதமான ஏதேனும் நிகழக்கூடும்; யாருக்குத் தெரியும்? உலக வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவில், அதற்கான விடையை நாம் அறிந்துகொள்வோம்.

47 ஆண்டுகால ஊழல் மற்றும் மரணங்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வருகின்றன. ஈரானில் உள்ள மக்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பின் பதிவு

டொனால்ட் டிரம்ப்பின் பதிவு - ட்ரூத்

உச்சத்தை எட்டிய பதற்றம்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தியதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வணிகப் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் கட்டுப்படு விதித்தது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு கெடு விதித்திருந்தார். இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து, தனது தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனக் கூறியிருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், செவ்வாய்க் கிழமை ஈரானின் மின் சக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியது.

அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், இன்று ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து தாக்கியது. இதில் ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி திறன் அழிந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் என்ற பெயரைப் பயன்படுத்தாமல், இன்று இரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது, அது மீண்டும் திரும்ப உயிர்ப்பெறாது என எச்சரித்துள்ளார். இதனால், மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Summary

Iran-US-Israel War whole civilization will die tonight’, Trump’s big warning to Tehran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.