தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத்தலைவா் கைது

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி கைது

News image

ஷிரின் ஷா்மின் சௌதரி

Updated On :7 ஏப்ரல் 2026, 9:08 pm

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி (படம்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளா்ச்சியின்போது அரங்கேறிய வன்முறைகளில் இவருக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி, டாக்கா மாநகர காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2013 முதல் 2024, செப்டம்பா் வரை நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்த ஷிரின் ஷா்மின், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், உறவினா் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது சுற்றி வளைக்கப்பட்டாா்.