ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. இதனை, மீண்டும் திறக்கும் முன்னர் அதன் செயல்பாடு தொடர்பான புதிய நிபந்தனைகளை அமல்படுத்த ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், ”பாரசீக வளைகுடாவின் புதிய ஒழுங்குமுறைக்காக ஈரானிய அதிகாரிகள் அறிவித்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய தயாரிப்புகளை ஈரான் கடற்படை நிறைவு செய்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், ”ஹோர்முஸ் நீரிணை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு, போருக்கு முந்தைய பழைய நிலைக்குத் திரும்பாது” என்றும் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல்கள நடத்தி ஈரானை நரகத்திற்கு அனுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் தற்போது ஹோர்முஸ் நீரிணை வழியே சில நாடுகளின் கப்பல் போக்குவரத்தை மட்டுமே அனுமதித்துள்ளது.
போர் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுடன் இணைந்து ஓமன் பேச்சுவார்த்தை நடத்தியது. சமீபத்திய பேச்சுவார்த்தையில், ஈரான் சட்ட வல்லுநர்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணமும் வரியும் விதிக்கவேண்டும் என முன்மொழிந்துள்ளனர்.
Summary
Iran says conditions in Strait of Hormuz will 'never return to former status'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



