அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் விடுத்த 48 மணிநேர காலக்கெடுவை ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) நிராகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு முடிவை எட்டாமல் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு டிரம்ப் 10 நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தார். அந்த அவகாசம் முடிவடையப்போகும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து, ஈரானின் மத்திய ராணுவ தலைமையகத்திலிருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாதி, “டிரம்பின் அச்சுறுத்தல் என்பது ஒரு பயனற்ற, பதற்றமான, நிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதற்கு பதில் கூறும் விதமாக, “உங்களுக்காக (டிரம்ப்) நரகத்தின் வாயில் திறக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய அந்நாட்டு அரசு வளாகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran's Central Military Headquarters on Sunday (April 5) rejected the 48-hour deadline issued by Trump for reaching an agreement between the United States and Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



