நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம், தனது பயணத்தின் முதல்பாதியை வெற்றிகரமாக கடந்துள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை ஏவப்பட்ட 2 நாள்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிஷங்களில் இந்த முக்கிய மைல்கல்லை விண்கலம் எட்டியது.
தற்போது இந்த விண்கலம் பூமியை விட நிலவுக்கு மிக அருகாமையில் நிலைகொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்கலத்திலிருந்து நேரலையில் பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், ‘இப்போது விண்கலத்தின் ஜன்னல் வழியாக நிலவைப் பாா்க்க முடிகிறது; அது ஒரு அற்புதமான காட்சி’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.
இதனிடையே, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரா்கள் பூமியின் அழகிய புகைப்படங்களையும், விடியோக்களையும் பகிா்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். குறிப்பாக, கமாண்டா் ரீட் வைஸ்மேன் எடுத்த பூமியின் முழு புகைப்படம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது.

ஆா்டெமிஸ்-2 விண்கலத்தில் இருந்து திட்ட கமாண்டா் ரீட் வைஸ்மேன் எடுத்த பூமியின் முழு புகைப்படம்.
பயணத்தின் அடுத்த கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலையில் விண்கலம் நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் நுழையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு, பூமியின் ஈா்ப்பைவிட நிலவின் ஈா்ப்பு விசை விண்கலத்தின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும்.
இந்த மைல்கல்லை எட்டினால், மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்த மனிதா்கள் என்ற சாதனையை இக்குழுவினா் படைப்பாா்கள்.
தொடா்ந்து, நிலவைச் சுற்றி வரத் திட்டமிட்டுள்ள இக்குழுவினா், பயணத்தின் 6-ஆவது நாளில் (செவ்வாய்க்கிழமை) நிலவுக்கு மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்வாா்கள். விண்வெளி வீரா்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை
நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய மைல்கல்! 42 நிமிஷங்கள் தொடர்பை இழந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது?
ஆர்டெமிஸ் 2: அரை நூற்றாண்டுக்குப் பின் நிலவை நோக்கி பயணித்த அமெரிக்கர்கள்!
நிலவை நோக்கி மீண்டும் பயணம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


