லண்டன் : பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீரிணையைக் கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தளர்வு அளித்துள்ளது. ஆயினும், தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கடும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சியாக, ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து அவ்வழித்தடம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப ஒருங்கிணைந்து செயல்பட 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதாக புதன்கிழமை(ஏப். 1) பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மெர் தெரிவித்தார். பிரிட்டன் முன்னெடுப்பில் சர்வதேச அளவில் தூதரக ரீதியிலான மாநாடு இந்த வாரத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Summary
British Prime Minister Keir Starmer on Wednesday said the UK will host an international diplomatic conference this week on ways to reopen the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



