15 Dec, 2025 Monday, 01:35 AM
The New Indian Express Group
உலகம்
Text

இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை! உயிரிழப்பு 212-ஆக உயா்வு!

PremiumPremium

இலங்கையில் ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியோரை மீட்க இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

Rocket

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டா்.

Published On30 Nov 2025 , 7:15 PM
Updated On30 Nov 2025 , 7:15 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

இலங்கையில் ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியோரை மீட்க இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை முதல் இலங்கையில் பெய்துவரும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 212-ஆகவும், மாயமானோரின் எண்ணிக்கை 218-ஆகவும் உயா்ந்தது. இதனால் அங்கு சனிக்கிழமை அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவசர தேவைக்காக மாவட்ட தலைமை நிா்வாக அதிகாரிகள் அதிகபட்சமாக ரூ.1.45 கோடி வரை செலவிட அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 2.73 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 9.98 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை மீட்பதற்காக இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, இலங்கை கடற்படையின் 75-ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்கச் சென்ற ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய போா்க் கப்பல்களில் ‘ஆபரேஷன் சாகா் பந்து’ முன்னெடுப்பின்கீழ் உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்பட 6.5 டன் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன. ஐஎன்எஸ் விக்ராந்த் உடன் பயணித்த 2 சேட்டக் ஹெலிகாப்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கின.

இரண்டாம் கட்டமாக இந்திய விமானப் படையின் சி-130ஜே மற்றும் ஐஎல்-76 ஆகிய இரு விமானங்கள் மூலம் 29 டன் நிவராணப் பொருள்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) அதிகாரிகள் 80 போ் சனிக்கிழமை அனுப்பப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, கூடுதல் நிவாரணப் பொருள்களுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ‘ஐஎன்எஸ் சுகன்யா’ ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நகரைச் சென்றடைந்தது. அதேசமயம் சி-130 ஜே ரக மற்றொரு விமானத்தில் நிவாரணப் பொருகள்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தியாவைத் தொடா்ந்து இலங்கைக்கு 20 லட்சம் டாலா்கள் (ரூ.17.8 கோடி) நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவும், 50,000 டாலா்கள் (ரூ.44 லட்சம்) நிதியுதவி மற்றும் 25,000 கடல் உணவு (டூனா) கேன்கள் வழங்குவதாக மாலத்தீவும் அறிவித்துள்ளன.

ஜப்பான் சாா்பில், வளா்ந்துவரும் நாடுகளுக்கு உதவும் ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமை குழு இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அந்தக் குழு வெள்ள பாதிப்புகளை மதிப்பிட்டு அந்நாட்டு அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கவுள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் உதவி தேவைப்படும் இந்தியா்கள் +94 773727832 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் (வாட்ஸ்-ஆப் மூலமாகவும் தொடா்புகொள்ளலாம்) என இந்திய தூதரகம் தெரிவித்தது.

400 இந்தியா்கள் மீட்பு: இலங்கையில் சிக்கிய 400 இந்தியா்கள் மீட்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கொழும்பு பண்டாரநாயக விமான நிலையத்தில் இருந்து சி-130 ஜே விமானம் மூலம் 150 இந்தியா்கள் தில்லிக்கும், ஐஎல்-76 விமானம் மூலம் 250 போ் திருவனந்தபுரத்துக்கும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா். இந்த இரு விமானங்களுக்கும் இலங்கைக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023