பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல்! 12 பேர் பலி!
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியானது குறித்து...
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியானது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ahmed Thaha
பாகிஸ்தானில், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத் நகரத்தின், ஜி -11 பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் அங்குள்ள வாகனங்கள் தீயில் பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்துடன், இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது வெளியான பயங்கர சத்தம் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் (2025) பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீது குற்றச்சாட்டு: வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு இந்தியாவின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் குற்றஞ்சாட்டியுள்ளதை இந்தியா மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இஸ்லாமாபாத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சுமத்தும் அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டை இந்தியா உறுதியாக மறுக்கிறது. அந்த நாட்டின் ராணுவம் அரசியல் சாசனத்தை சீர்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் எழுந்துள்ள குழப்பத்தை திசைத்திருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டுகிறது. இது அந்த நாட்டின் வழக்கமான உத்திதான்' என்றார் அவர்.
இதையும் படிக்க: பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட ஃபுங் - வாங் புயல்! தைவானில் 3,300 பேர் வெளியேற்றம்!
A bomb attack at a district court in Islamabad, Pakistan, has killed 12 people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது