பாகிஸ்தான் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவருக்கு 14 ஆண்டு சிறை
பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவா் ஃபய்ஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவா் ஃபய்ஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியது, அரசியலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவா் ஃபய்ஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“2024 ஆகஸ்ட் 12-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் ஃபய்ஸ் ஹமீதுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. 15 மாதங்கள் நீடித்த விசாரணையில் அரசியல் செயல்பாடுகள், ரகசியக் காப்புச் சட்டத்தை மீறி அரசின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு தீங்கு விளைவித்தல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட நான்கு குற்றங்களில் அவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
2019 முதல் 2021 வரை ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஃபய்ஸ் ஹமீத், 2022 டிசம்பரில் ஆசிம் முனீா் ராணுவத் தலைவரான பிறகு ஓய்வு பெற்றாா். அவா் ராணுவ முன்னாள் தலைமை தளபதி கமா் பஜ்வாவுடன் நெருக்கமானவராக இருந்தாா்.
இது பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ஐஎஸ்ஐ அமைப்பின் முன்னாள் தலைவருக்கு ராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது இதுவே முதல்முறை.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது