நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட மிகப் பழமையான 38 வயதான செயற்கைக்கோள் இந்த வாரத்தில் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் 2,450 கிலோ எடைகொண்ட பணியிலிருந்து ஓய்வுபெறும் செயற்கைக்கோள், எங்கு வேண்டுமானாலும் விழலாம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. கோழிக்கறியை சமைப்பதற்கு முன் அலசவே கூடாதா? ஏன்?
அதாவது, புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே, அது எரிந்துவிடும். ஆனால், ஒரு சில பாகங்கள் மட்டும் எரியாமல் பூமிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாசா கூறுகிறது.
ஆனால், 9,400ல் ஒரு பங்குதான், இந்த செயற்கைக்கோள் பாகங்கள் விழுந்து யாருக்கேனும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவில், இந்த செயற்கைக் கோள் பூமியில் விழலாம் என்றும், முழுதாக 17 மணி நேரம் அது பயணித்து பூமியை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இதன் பாகங்கள் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய அமெரிக்காவில் விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் என்று 2 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது. ஓசோன் மற்றும் இதர சூழ்நிலைகளை கண்காணிக்கும் பணியை இது 2005 வரை மேற்கொண்டிருந்தது. சூரியனிடமிருந்து வரும் சக்தியை பூமி எப்படி கிரகித்துக் கொள்கிறது என்ற ஆராய்ச்சியிலும் உதவி செய்தது.
இதற்கு சிறப்பான பிரிவு உபசரிப்பு நடைபெற்றது. அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பெண் சேல்லி ரைட், அமெரிக்காவின் ஆர்பிட்டிலிருந்து செயற்கைக்கோளை ரிமோட் மூலம் விடுவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

