இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை காரணமாக அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் ராஜபட்ச தப்பிச் சென்றார்.
இதையும் படிக்க | ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு!
இந்நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை கோத்தபய ராஜபட்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே இவ்வாறான தகவல் கசிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இச்செய்தி அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கான ஏற்பாட்டை தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவதாக பரவி வரும் செய்தி அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு
சிரி... சிரி...
அசத்தல்...
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

