நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கலிஃபோர்னியாவில் இந்திய குடும்பம் படுகொலை: குற்றங்களை ஒப்புக்கொண்ட குற்றவாளி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன் மீதான அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

News image

கலிஃபோர்னியாவில் இந்திய குடும்பம் படுகொலை; குற்றவாளி மீது குற்றச்சாட்டுப் பதிவு

Updated On :14 அக்டோபர் 2022, 7:13 am

நியூ யார்க்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன் மீதான அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

மெர்செட் கௌண்டி நீதிமன்றத்தில் நேற்று குற்றவாளி ஜீசஸ் மேனுவல் சல்காடோ ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது நான்கு பேரையும் கொலை செய்தது, நான்கு பேரின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இது மட்டுமல்லாமல், தனது வாகனத்தில் சட்டத்தை மீறி ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், கொலை செய்யப்பட்டவர்களின் வாகனத்துக்கு தீ வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.  அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சல்காடோ நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

Story image

இந்த தண்டனைகளின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டால்,  சால்கடோ, பரோலில் விடுதலை செய்ய வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொலை செய்தது ஏன்?

8 மாதக் கைக்குழந்தை உள்பட நால்வரை கொலை செய்த சல்காடோ, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதற்குக் காரணத்தை தெரிவித்துள்ளார். இந்த குடும்பத்துடன் தனக்கு நீண்ட நாள் பகை இருந்ததாகவும், இந்த குடும்பத்தினர் நடத்திய வந்த டிரக்கிங் தொழிலில் தான் முன்னாள் ஊழியராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பழிவாங்குவதற்காகவே, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிச் சடங்கு

கொல்லப்பட்ட நால்வரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை டர்லாக்கில் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதியில்லை. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இறுதிச் சடங்கு நடக்கும் பகுதிக்கு வெளியே அனுமதிக்கப்படுவர்.

இந்தியர்கள் கடத்திக் கொலை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை, அவரது பெற்றோர் உள்பட நான்கு பேரும் கடந்த வாரம் திங்கள்கிழமையன்று கடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இரண்டாவது நாள் அவர்கள் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது கலிஃபோர்னியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கௌர் (27), ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் திங்கள்கிழமையன்று வடக்கு கலிஃபோர்னியாவின் மெர்சிட் கௌண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடத்தப்பட்டனர்.

இவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இண்டியானா சாலை மற்றும் ஹட்சின்சன் சாலைக்கு அருகே நால்வரின் உடல்களை புதன்கிழமை மாலை பார்த்த தொழிலாளர்கள் சிலர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அவர்கள் கடத்தப்பட்ட இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர். அதில், ஜஸ்தீப் மற்றும் அமன்தீப் ஆகியோர் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெளியே அழைத்து வரப்படுகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து, குழந்தையுடன் அவரது தாயும் வெளியே அழைத்து வரப்பட்டு, ஒரு டிரக்கில் ஏற்றப்படுகிறார்கள்.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை அடையாளம் கண்ட காவல்துறையினர், 48 வயதாகும் ஜீசஸ் மேனுவல் சல்காடோவைக் கைது செய்ய முயன்ற போது, அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால், ஆபத்தான நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சல்காடோ குறித்து காவல்துறை அதிகாரி ஷெரிஃப் வார்ங்கே கூறுகையில், நரகத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு சிறப்பான இடம் தயாராக இருக்கும் என்று கூறினார்.

இது குறித்து மெர்சிட் கௌண்டி காவல்துறையினர் கூறுகையில், சல்காடோவின் குடும்பத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டு, அவர் இந்தியர்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.

ஜஸ்தீப் பெற்றோர் டாக்டர் ரன்தீன் சிங் மற்றும் கிர்பால் கௌர் ஆகியோர் பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூர் பகுதியில் உள்ள ஹர்ஸி பிந்த் கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.

வழக்கு விசாரித்து வரும் மெர்செட் கௌண்டி ஷெரிஃப் வெர்ன் வார்ன்கே கூறுகையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.